The Literary Associations aim at creating a love for the language and a passion to acquire higher order skills such as creative communication through the media of prose, poetry, drama etc.Young Leaves English Literary Association programme was conducted in the Auditorium of our college on 19th September 2018. The programme commenced with the lighting of the Ceremonial lamp by the Hon’ble Chief Guest Mrs.V.Kavitha, escorted by the other dignitaries and the Principal.
The Principal, Dr.V.Selvanathan welcomed the guests and introduced the
Hon’ble Chief Guest to the gathering. The Principal, in his inaugural
address, talked on the importance of the English language in communication today,
and emphasized the importance of English for better employability.
The chief guest for the day was Mrs.V.Kavitha from Sir Theagaraya College, Old washermenpet, Chennai.She delivered an enlightening speech on the topic “Approaches to a Foreign Language-especially English. She noted that, "Our mother tongue is not English but what happens eventually is that, we try to learn English to communicate with people. Neither are we confident in our mother tongue, nor in our target language - English." She said it was amazing to see the extraordinary demand among students, to join a course in BA/MA English Literature over the past few years. The programme ended with national anthem.
இளந்தளிர் தமிழ்
இலக்கிய மன்றம் துவக்க விழா
2017 – 2018
ஸ்ரீ
முத்துக்குமாரசுவாமி கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில், இளந்தளிர் தமிழ்
இலக்கிய மன்றம்' தனது முதலாம் ஆண்டு துவக்க விழாவினை 05.02.2018 அன்று இனிதாய் துவங்கியது. இவ்விழாவில்
கல்லூரி நிர்வாகக்குழு தலைவர் திரு.ரா.விவேகானந்தன், செயலர் திருமதி. வி.அருள்மொழி முதல்வர் முனைவர் வி.செல்வநாதன் சிறப்பு
விருந்தினர் முனைவர் திரு.யாழினி முனுசாமி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவினை
துவக்கி வைத்தனர். தமிழ்த்துறை
தலைவர். திருமதி இரா. கல்பனா தேவி அவர்கள் விழாவிற்கு வந்துள்ள அனைவரையும்
வரவேற்று வரவேற்புரை நல்கினார். கல்லூரி முதல்வர் திரு.வி.செல்வநாதன் அவர்கள், தலைமை உரை வழங்கினார். அவர் தனது தலைமையுரையில், மாணவர்கள் இக்கால
சூழலில் தமிழ் மொழியின் மீதும், தனது கல்வியின் மீதும், உள்ள கற்றல் குறைபாடுகளைக் களைய வேண்டும் என்பதை தனது அழகான கவிதை வரிகளில்
வெளிப்படுத்தினார்.
கல்லூரி நிர்வாகக்குழு செயலர் திருமதி. வி.அருள்மொழி
அவர்கள், மாணவர்களுக்கு கல்வியின்
முக்கியத்துவத்தைப்பற்றி எடுத்துக்கூறி சிறப்புரையாற்றினார்.
அதன்பின் சிறப்பு
விருந்தினர், முனைவர்.திரு.யாழினி முனுசாமி அவர்கள் முக்கிய சிறப்புரை
வழங்கினார். தமிழின் தொன்மை குறித்தும், தமிழ் மொழி எவராலும், எந்நாட்டவராலும்
அழிக்க முடியாத சக்தி வாய்ந்த மொழி என்றும் கூறினார். இலக்கியம் என்பது,
இலக்கு + இயம் = குறிக்கோள். குறிக்கோளினை அடைவதே இலக்கியம் எனப் பொருள்கூறி தமிழ் இலக்கியமும் அதன்
பழமையான பயன்பாடுகள் குறித்தும் சிறப்புரையில் கூறினார். நம்முடைய பண்பாட்டினை
இன்றைய இளைஞர் சமுதாயத்தினரே மீட்டெடுத்து பின்பற்றிட வேண்டும் என்று
அறிவுறுத்தினார்.
இறுதியாக தமிழ்
துறை உதவிப்பேராசிரியர் திரு.பா.லட்சுமணன் அவர்கள் நன்றி நவிலல் கூறினார்.
இந்நிகழ்ச்சியின் முடிவில் நாட்டுப்பண்
இசையுடன் இளந்தளிர் தமிழ் இலக்கிய மன்ற துவக்க விழா நிறைவுற்றது.
இந்நிகழ்ச்சி
சிறந்த வெற்றிகரமான நிகழ்ச்சியாக நடந்தேறியது. கல்லூரியின் வரலாற்றுச்சான்றுக்கு
ஒரு நல் உதாரணமாக அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
நன்றி