ஸ்ரீ
முத்துக்குமார சுவாமி கல்லூரி
கொடுங்கையூர்
சென்னை-118.
இளந்தளிர்
தமிழ் இலக்கிய மன்றம்
Young Leaves Literary Association
வாசகர் வட்டம்
முப்பெரும் விழா
நாள் :
23/09/2021
நேரம்: காலை10.00மணி
கல்லூரியின் தலைவர் திரு.இரா.விவேகானந்தன்
கல்லூரியின் செயலர்
திருமதி.வி.அருள்மொழி மற்றும்
கல்லூரியின் முதல்வர்
முனைவர்.வ. செல்வநாதன்
ஆகியோர் முப்பெரும் விழாவினை இனிதே தொடங்கி
வைத்தனர்.
அடுத்த நிகழ்வாக தமிழ்த்தாய் வாழ்த்து இனிதே
பாடப்பட்டது.
. கல்லூரியின் செயலர் திருமதி அருள்மொழி
அவர்கள் விழாவிற்கான
நல்லதொரு தலைமை
உரையை வழங்கி அதன் வாயிலாகக் கல்லூரியின்
வளர்ச்சி பற்றியும்
மாணவர்களின் கற்றல் தேவை
பற்றியும் விரிவாக
சிறப்புரை ஆற்றினார்.
கல்லூரியின் முதல்வர் முனைவர் வ. செல்வநாதன்
அவர்கள் சிறப்பானதொரு
துவக்க உரையினை
வழங்கினார் . அவ்வுரையில்
தமிழ் இலக்கிய
மன்றத்தின் அவசியம்
பற்றியும் அதன் பணிகள்
குறித்தும் சிறப்பாக
உரையாற்றினார்.
ஆங்கில துறை உதவிப் பேராசிரியர் திருமதி சுகன்யா
அவர்கள் வரவேற்புரை
வழங்கினார்.
தமிழ்த்துறை உதவிப்
பேராசிரியர் திருமதி முனைவர்
திருமதி கலாவதி அவர்கள்
தொகுப்புரை ஆற்றினார்.
திரு அதியமான் அவர்கள்,
"முத்தமிழில் முத்தெடுத்து
மூவுலகை வென்றெடுத்து
முத்திரை படைப்போம் வாரீர்"
என்ற தலைப்பின் வாயிலாகத்
தமிழின் சிறப்புகள்
குறித்தும்,அதனை மாணவர்கள்
எவ்வாறெல்லாம்
படித்துப் புரிந்து
கொள்ள வேண்டும் என்பது குறித்தும்,
மிக விரிவாக சுவையானதொரு சிறப்புரை ஆற்றினார்.
திரு.சி.ஆ.மோகனரங்கம் அவர்கள் மாணவர்களின்
அறிவுப் பெருக்கத்திற்கு
நூலகம் ஆற்றும் பணிகள்
குறித்து நல்லதொரு
கருத்துரையை வழங்கினார்.
நேர்முகத் தேர்வுக்கு
தயாராகுதலின் முக்கியத்துவம்
குறித்து எடுத்துரைத்து
மாணவ மாணவியர்களுக்கு
நல்வழிப்படுத்தினார்.
தமிழ்த்துறை தலைவர் முனைவர் இரா .கல்பனா
தேவி அவர்கள் நன்றி
நவிலல் என்ற தன் உரையில்
இவ்விழாவின் தன்மை பற்றியும் சிறப்பு விருந்தினர்கள்
.
ஆற்றிய உரை பற்றியும்
எடுத்துரைத்தார்.
நாட்டுப்பண் பாடப்பட்டு
முப்பெரும் விழா இனிதே
நிறைவேறியது.